முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'பும்ரா' சிறப்பாக செயல்படுவார்: முன்னாள் வீரர் பாண்டிங் கணிப்பு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      விளையாட்டு
Ponting 2022--09-23

Source: provided

20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாடும் தங்களது அணியை அறிவித்து விட்டன. இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திரும்பி உள்ளார். அதே போல் காயத்தில் இருந்து குணம் அடைந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியின்போது, உலக கோப்பையில் பும்ரா, ஷகீன் ஷா அப்ரிடி இருவரில் யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் பதிலளித்து கூறும் போது, ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா முன்னிலையில் உள்ளார் என்று கருதுகிறேன். இதில் அனுபவத்தை வைத்து நான் பதில் கூறுகிறேன். பும்ரா ஆஸ்திரேலியாவில் ஓரளவு கிரிக்கெட் விளையாடி உள்ளார். ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாகவும், பெரிய போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இதனால் உலக கோப்பையில் அப்ரிடியை விட பும்ரா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன் என்றார்.

_____________

இந்திய அணியில் ரிஷப் இடம் பெற வேண்டும் - கில்கிறிஸ்ட் 

இந்திய அணியில் நிலவி வரும் ஒரே விவாதம் எதைப் பற்றி இருக்கிறது என்றால், ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டுமா அல்லது யாராவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமா என்ற விவாதம். கடந்த ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை.இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் இது குறித்து கூறியதாவது., ரிஷப் பண்ட் மிகவும் தைரியமான வீரர். அவர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம்,அவர் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறன்.அவர்களால் ஒன்றாக விளையாட முடியும், ஆனால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். இருவரும் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

_______________

இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டும்: முகமது கையிப் விருப்பம்

இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது கையிப், டெல்லியில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது.,  அவர்கள் ஒரு நல்ல வலுவான அணியைக் கொண்டிருப்பதாலும், முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியதாலும், இந்திய அணி மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் (இந்தியா) வெற்றி பெற வேண்டும்.சமீபத்தில் ஐசிசி கொண்டு வந்த ஸ்லோ ஓவர் ரேட் விதி மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது. இது சில காலத்திற்கு முன்பு செயல்படுத்தப்பட்டது, ஆனால் வெற்றி பெறவில்லை.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தேர்வில் சிறந்த 11 பேரை கண்டு பிடிக்க முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ரோகித் ஒரு சிறந்த கேப்டன். அவர் ஐபிஎல் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார், ஆனால் இந்திய அணி தேர்வில் சந்தேகம் கொண்டிருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

______________

உலகக்கோப்பை ஹாக்கி: ஒடிசா அரசு நிதி ஒதுக்கீடு

2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை முன்பை விட சிறப்பாகவும்,பெரிய அளவிலும் நடத்த ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.இந்த நிலையில் ஹாக்கி உலகக் கோப்பையை முன்னிட்டு , புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் மற்றும் ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதியை ஒடிசா அரசாங்கம் அதிகரித்துள்ளது.

முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அமைச்சரவை இந்த முடிவை  எடுத்தது. இந்த திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.432.45 கோடியில் இருந்து ரூ.875.78 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் எஸ்.சி.மஹாபத்ரா தெரிவித்தார். நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அமைச்சரவை இந்த முடிவை ஒப்புதல் அளித்துள்ளது. பிர்சா முண்டா ஹாக்கி ஸ்டேடியம் ரூர்கேலாவில் 20,000 பேர் அமரக்கூடிய வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது, இது இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியமாக மாறும்.இதேபோல், புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் இந்தியாவின் முதல் உட்புற தடகள அரங்கம், உட்புற நீர்வாழ் மையம், டென்னிஸ் மைதானம், ஹாக்கிக்கான உயர் செயல்திறன் மையம், தங்குமிட வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து