முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு, ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை : தமிழகத்தில் டெங்கு, ப்ளூ காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

தமிழகத்தில் குழந்தைகளிடையே வேகமாக பரவி வரும் ப்ளூ காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தை பின்பற்றி தொடக்கப் பள்ளிகளுக்கு சிறிது காலம் விடுமுறை அளிக்குமாறு நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரோ பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத் தேவையில்லை என்றும், அனைத்தும் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் தெரிவித்து இருந்தார். 

இருப்பினும், கள நிலைமை வேறுவிதமாக உள்ளது. ப்ளூ காய்ச்சலைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலும் செப்டம்பர் மாதத்தில் இரு மடங்காக அதிகரித்து பொது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன. காய்ச்சல் முகாம்களில் 6,860 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1,798 பேருக்கு இன்புளு வென்சா எனப்படும் ப்ளூ தொற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து