முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உருவக்கேலி செய்யாதீர்கள் - சிம்பு வேண்டுகோள்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      சினிமா
Simbu 2022-09-24

Source: provided

Vels Film International Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ்,  இந்த படத்திற்காக சிம்புவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும், இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது என்றும் கூறினார். இயக்குனர் கௌதம் மேனன் பேசுகையில், நான் ஒரு கதை கொண்டு வரும் போது, என்னை நம்பி எப்பொழுதும் ஒத்துகொள்ளும் சிம்புவிற்கு நன்றி.  சிம்பு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற ஒரு படத்தை எடுக்க எனக்கு உதவிகரமாக இருந்த சிம்புவிற்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி என்றார். பின்னர் பேசிய சிம்பு, என் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியானது இது தான் முதல் முறை, இது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. படம் இவ்வளவு வசூல் குவிக்கும் என நான் நினைக்கவில்லை. படத்தின் வெற்றி மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. என்னை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டும் என நினைத்தேன். இந்தப்படத்தின் ஒல்லியாக மாறி நடித்துள்ளேன் அதனால் சிலரால் என் உடம்பை கேலி செய்ய முடியவில்லை. ஒருவரின் உருவத்தை கேலி செய்யாதீர்கள். ஆனால் அது பலருக்கு வலியை தரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து