முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை தொழிலாளர்கள் இல்லா மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் அமைச்சர் கணேசன் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
Ganesan 2022-09-27

Source: provided

சென்னை: குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.  

சென்னை டி.எம்.எஸ்.வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடந்த தொழிலாளர் நலத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசியதாவது,

தமிழக முதல்வர் தலைமையிலான அரசு மக்களின் அரசு. தொழிலாளர்களுக்கான அரசு. இந்த அரசு தொழிலாளர்களின் விடியலுக்கான அரசு. இவ்வரசாங்க தொழிலாளர் துறையானது சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறது. இத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த அனைத்து அலுவலர்களும் சிறந்த முறையில் இத்துறை செயல்பட நாம் அனைவரும் ஓர் உதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து பிரச்சினைகளுக்கு முழுமையாக தீர்வு காணும் நோக்கத்திலும் செயல்படும் அரசாக இருந்து வருகிறது.

தொழிற் தகராறுகள் சட்டம், 1947, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947, குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1948, பணிக்கொடை பட்டுவாடா சட்டம், 1972, தோட்டத் தொழிலாளர்கள் சட்டம், 1951, சட்டமுறை எடையளவு சட்டம், 2009 மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தொழிலாளர் நல சட்ட அமலாக்க பணிகளை துறை அலுவலர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தி அதிகளவில் ஆய்வுகள் மேற்கொண்டு அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதன்மூலம், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு  அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து