முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக முதியோர் தினம்: ஜி.கே.வாசன் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
GK-Vasan 2022--09-30

Source: provided

சென்னை : உலக முதியோர் தினத்தையொட்டி த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வருடந்தோறும் அக்டோபர் 1-ம் தேதி அன்று உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, 

வீடும், நாடும், சமூகமும் உயர்வடைய தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓய்வெடுக்கும் முதியோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலே, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலே, வருடந்தோறும் அக்டோபர் 1-ம் தேதி அன்று உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. 

தான் கற்காத கல்வியையும், அடையாத பதவியையும், சமூகத்தில் அடையாத உயரத்தையும் தன் சந்ததிகள், பெற வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, தன் சுய தேவைகளையும், ஆசைகளையும் துறந்து பாடுபட்ட முதியோர்களின் தியாகங்களை போற்றும் விதமாக அவர்களை வணங்குவோம். இந்த நல்லநாளில் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், அன்பையும் பாதுகாப்பையும் அளிப்போம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து