முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கு விசாரணை முடிந்த பிறகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
CV-Shanmugam 2022--09-30

Source: provided

சென்னை : வழக்கு விசாரணை முடிந்த பிறகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தெரிவித்தார். 

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்றதையொட்டி, முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம், வக்கீல் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் டெல்லி சென்றிருந்தனர். கோர்ட்டு விசாரணைக்கு பிறகு சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான எந்தவித நடவடிக்கைகளையும் தொடங்கவில்லை என்று எங்கள் தரப்பில் கோர்ட்டில் தெரிவித்து உள்ளோம். பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பையே நாங்கள் வெளியிடவில்லை. 

வழக்கு நிலுவையில் உள்ள போது தேர்தலை எப்படி நடத்துவோம். நாங்கள் சட்டபடியே செயல்படுகிறோம். வழக்கு விசாரணை முடிந்த பிறகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். வழக்கை விரிவான விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து