முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      உலகம்
New-York 2022 11 23

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக நியூயார்க் மாகாணத்தில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மாகாணம் முழுவதும் பலத்த காற்றுடன் பனி கொட்டி வருகிறது. அங்குள்ள எரி நகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் 180 செ.மீ. பனிப்பொழிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனால் சாலைகள், வீடுகள், வாகனங்கள் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் குவிந்துள்ள பனியை அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகின்றன. 

இதனிடையே கடுமையான பனிப்பொழிவை எதிர்கொண்டுள்ள நியூயார்க் மாகாணத்தில் அதிபர் ஜோ பைடன் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். அங்கு பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து