முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று நடைபெறுகிறது கவுதம் கார்த்திக் - மஞ்சுமா திருமணம்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      சினிமா
Gautam-Manjuma 2022 11 27

Source: provided

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனுக்கும் சென்னையில் இன்று (நவ;28)திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு பின்பு நடக்க உள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரை பிரபலங்களை அழைக்க உள்ளனர்.

இது குறித்து பேசிய நடிகர் கவுதம்,  நீ ஒரு சரியான நபரை சந்திக்கும் போது அவர் உன்னை உண்மையான மனிதனாக்குவார்  என்று என் தந்தை எப்போதும் கூறுவார். மஞ்சிமா அப்படிப்பட்ட ஒரு நபர் எனக்கு. என்னை ஒரு மனிதனாக மாற்றியவர் அவர். மஞ்சிமா அழகானவர் மட்டுமல்ல, வலிமையான பெண்ணும் கூட. நான் எப்போது பலவீனமாக இருந்தாலும், என்னை அதிலிருந்து தூக்கி விடுவது அவர்தான். தேவராட்டம் படத்தில் நடித்தபோது நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தே நாங்கள் காதலித்தோம்" என்று தெரிவித்தார். 

மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் கவுதம் கார்த்திக் சினிமாவில் அறிமுகம் ஆனவர். வை ராஜா வை, ரங்கூன், ஹரஹர மகா தேவகி, உள்ளிட்ட பல படங்கள் கவுதமுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து