முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டத்து அரசன் விமர்சனம்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      சினிமா
Atharva-Rajgiran 2022-11-28

Source: provided

அதர்வா, ராஜ்கிரன், நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பட்டத்து அரசன். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  ஊருக்கும், குடும்பத்துக்கும் இடையே நடக்கும் கபடி போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பால சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கதை; தஞ்சாவூர் காளையார்கோவில் அருகேயுள்ள கிராமத்தில் உள்ள கபடி வீரரான ராஜ்கிரண். அரசு வேலையைவிட ஊரின் மானம்தான் பெரியது என்று ஊருக்காக கபடி விளையாடியவர். இந்நிலையில் ராஜ்கிரனின் குடும்பம் ஊருக்கு துரோகம் விளைவித்ததாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். இதனால் ஊரை எதிர்த்து கபடி ஆட வேண்டிய கட்டாயத்துக்கு அக்குடும்பம் தள்ளப்படுகிறது. அதர்வா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஊரை எதிர்த்து கபடி ஆடி எப்படி ஜெயிக்கிறார் என்பதே படத்தின் கதை. சற்குணம் வழக்கம்போல தனது கிராமத்து ஸ்டைலில் இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார். ஊரின் மரியாதைக்காக போராடும் பொத்தாரியாக ராஜ்கிரண், அதர்வாவின் தாயாராக ராதிகா இருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். மொத்தத்தில் பட்டத்து அரசன் வாகை சூடியிருக்கிறான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து