எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வீடுகள், கைத்தறி, விசைத்தறி, குடிசைகள் மற்றும் விவசாய மின் இணைப்பு தாரர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியானது கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் 2.34 கோடி வீடுகள், 22.87 லட்சம் விவசாய பம்பு செட்டுகள், 9.75 லட்சம் குடிசை வீடுகள் மற்றும் 1.65 லட்சம் விசைத் தறி ஆகிய நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
ஆனாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நேற்று முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான முகாம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. வருகிற டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 2811 பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம் நடக்கிறது. இந்த ஒவ்வொரு பிரிவு அலுலகத்திலும் தலா ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் ஊழியர் பொதுமக்களுக்கு மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து கொடுக்கிறார். இதற்காக பொது மக்கள் தங்களின் ஆதார் அட்டை, மின்கட்டண அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை பதிவு செய்து செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை பதிவு செய்தால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். இதை உறுதி செய்யும் வகையில் வாடிக்கையாளர்களின் செல் போனுக்கு குறுஞ்செய்தியும் வரும்.
வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் இவர்களில் யார் வேண்டுமானாலும் ஒருவர் ஆதார் எண்ணை இணைக்க முடியும். வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டண அட்டையுடன் தங்களின் ஆதார் அட்டை, செல்போன் ஆகியவற்றை எடுத்துச் சென்று இணைக்க வேண்டும். சென்னையில் 180-க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
இந்த நிலையில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் இணைப்புடன் தங்களின் ஆதார் எண்ணை இணைத்த பிறகு வீடு மாறி செல்லும் நிலையில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்ற குழப்பம் வாடகை தாரர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வீடுகளில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் வீடு மாறி வேறு வீட்டுக்கு குடியேறும் போது அந்த வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் தங்களின் ஆதார் எண்ணை மீண்டும் பதிவு செய்ய முடியும். இதேபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வீட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
அவர்கள் இந்தியாவில் உள்ள தங்களின் ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அந்த வீட்டில் வசிப்பவர்கள் அல்லது உறவினர்களின் ஆதார் எண்ணை இணைத்து மின் கட்டணம் செலுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மின் கட்டணம் செலுத்துவதற்காக வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதால் வீட்டு உரிமையாளர்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்படுமோ? வாடகைதாரர்கள் அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடினால் எதிர்காலத்தில் ஏதாவது சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதனால் வாடகை தாரர்கள் ஆதாரை இணைப்பதற்கு பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். வாடகைதாரர்களின் ஆதார் இணைப்பு மூலம் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் உரிமைகளை எப்படி பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகளிடையே மீண்டும் குழப்பம் நீடித்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் பொது மக்களுக்கு உள்ளன.
ஆனால் அந்த சந்தேகங்களை யாரிடம் கேட்டு நிவர்த்தி செய்வது என்று அவர்களுக்கு தெரிய வில்லை. முகாம்களில் உள்ள ஊழியர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் சரியாக பதில் சொல்ல தெரிய வில்லை. இதற்கிடையே பொது மக்களின் கேள்விக்கு இணையதளத்தில் பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் கேள்விகளை கேட்டு பதில் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய பட்ஜெட்டிற்கு இ.பி.எஸ். வரவேற்பு
01 Feb 2026சென்னை, 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள நிர்மலா சீதாராமனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2026டெல்லி, வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
வரி தாக்கலின் போது பொய் கணக்கு காட்டினால் 100 சதவீதம் அபராதம்: பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரிசட்டம் நடைமுறைக்கு வரும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தாக்
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜனாதிபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2026டெல்லி, 2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது: மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற்றிலும் புறக்கணிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
01 Feb 2026சென்னை, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்பை பொய்க்கச்செய்து, ஏமாற்றத்தை தந்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நலன்கள் முற
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன் நிதியமைச்சக குழுவினருடன் நிர்மலா சீதாராமன் புகைப்படம்
01 Feb 2026டெல்லி, எதிர்வரும் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட், பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
-
முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்வி வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
வார ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
01 Feb 2026- நெல்லையப்பர் கோவிலில் செளந்திரசபா நடனம்.
- வைத்தீசுவரன் கோவிலி செல்வமுத்து குமாரசுவாமி புறப்பாடு.
- திருச்சேறை சாரநாதர் சப்தாவர்ணம்.
- சென்னை சிங்காரவேலவர் தெப்பம்
-
இன்றைய ராசிபலன்
01 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
01 Feb 2026


