முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
Stalin 2022 01 28

Source: provided

சென்னை : பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனாரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம் பேராசிரியர் அன்பழகன்  கல்வி வளாகம் என்று அழைக்கப்படும் என்றும் சிறந்த பள்ளிகளுக்கு  பேராசிரியர்  பெயரில்  விருதும் வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின்  நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூ. 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின்  பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு  ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 

அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முதல்வர் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.  

இத்துடன், பேராசிரியர் அன்பழகனின்  நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச்சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்றும் அழைக்கப்படும்.   

மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக  வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப்  பேராசிரியர்  பெயரில் விருதும் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து