முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சத்துணவு மையங்களை மூடும் திட்டம் ஏதுமில்லை: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      தமிழகம்
Geethajeevan 2021 12-06

தமிழகத்தில் சத்துணவு மையங்களை மூடும் திட்டம் ஏதுமில்லை என்று அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 

சத்துணவு மையங்களை மூட முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தியைத் தொடா்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் 43 ஆயிரத்து 190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமாா் 46 லட்சம் மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா். ஒவ்வொரு சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

ஆனால், 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு அறவே கிடையாது.  பள்ளி, சத்துணவு மையங்களில் எண்ணிக்கை அல்லது பணியாளா்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும் சத்துணவுத் திட்டத்தை வலுப்படுத்தவும், தொடா் கண்காணிப்பு செய்யவும்தான் இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை. வரும் ஆண்டில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

இப்படிப்பட்ட சூழலில், சத்துணவுத் திட்டத் துறையில் உள்ள சத்துணவு மையங்களை மூட அரசு எப்படி முயற்சிக்கும். சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும், சத்தான உணவை முறையாக மாணவா்களுக்கு வழங்கவும், தொடா் கண்காணிப்பை வலுப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து