முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எர்ணாகுளம் - தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் ஆரியங்காவில் நிறுத்தப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2022      தமிழகம்
Train 2022 09 03

எர்ணாகுளம் - தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் ஆரியங்காவு ஹால்ட் என்ற இடத்தில் கூடுதலாக நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- எர்ணாகுளம் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (06068-06067) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் திங்கள்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, நியூ ஆரியங்காவுக்கு மாலை 6.45 மணிக்கும், ஆரியங்காவு ஹால்ட்டுக்கு மாலை 6.51 மணிக்கும் சென்றடையும்.

 அங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்துக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, ஆரியங்காவு ஹால்ட்டை மறுநாள் அதிகாலை 5.01 மணிக்கும், நியூ ஆரியங்காவு நிலையத்தை அதிகாலை 5.07 மணிக்கும் அடையும். அன்றையநாள் நண்பகல் 12.30 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து