முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஐ.என்.எஸ் மர்மகோவா போர்க்கப்பல்: நாட்டுக்கு அர்பணித்தார் ராஜ்நாத் சிங்

ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2022      இந்தியா
Rajnath 2021 12 18

Source: provided

மும்பை : இந்தியாவிலேயே முற்றிலும் வடிவமைக்கப்பட்டதும்,  ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன ஐ.என்.எஸ். மர்மகோவா போர்க்கப்பல், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த கப்பலை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.

இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்டு உள்ள 75 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இந்த கப்பல் 163 மீ., உயரமும், 17 மீ., அகலமும் உடையது.7,400 டன் எடையை தாங்கி செல்லும் திறன் உடையது. இந்த கப்பலின் அதிகபட்ச வேகம் 30 கடல் நாட்டிகல் மைல் ஆகும்.

இந்திய கடற்படையின் உள் நிறுவனமான 'வார்ஷிப் டிசைன் பீரோ'வால் வடிவமைக்கப்பட்டு, 'மாஷாகான் டாக்' என்னும் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டது. ஐ.என்.எஸ். மர்ம கோவா போர்க்கப்பல், இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.

இந்த கப்பலில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. தரையில் இருந்து வானில் இருக்கும் எதிரி ஏவுகணைகளை இடமைமறித்து தாக்கி அழிக்கும்திறன் கொண்ட ஏவுகணைகள் இதில் உள்ளன. தரையில் இருந்து சென்று தரையில் இருக்கும் இலக்குகளை அழிக்கும் 'பிரமோஸ் ' ரக ஏவுகணைகள், டியூப் லாஞ்சசர்கள், உள்ளிட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க்கருவிகளும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது.

அணுஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் போன்ற ஆபத்தான ஆயுதங்களை போன்ற நிலைமைகளை சமாளிக்கும் வகையில் உள்ள இந்த கப்பலில், அதி நவீன ரேடார்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலை கடற்படையில் இணைத்த பின்னர் ராஜ்நாத் சிங் பேசுகையில், போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியாவின் திறமையை இந்த போரக்கப்பல் காட்டுகிறது. கப்பல் கட்டுமான மையத்தில் இந்தியாவை முக்கிய இடமாக மாற்றுவதற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட போர்க்கப்பல்களில் சக்தி வாய்ந்தவைகளில் ஒன்றாக ஐ.என்.எஸ். மர்ம கோவா கப்பல் உள்ளது. நாட்டின் கடலோர பாதுகாப்பு மற்றும் தே நலன்களை பாதுகாப்பதை உறுதி செய்யும். நவீன தொழில்நுடபங்களுடன் கூடிய ஏவுகணைகளை தாங்கும் வசதியும் உள்ளது. நாட்டின் தற்போது எதிர்கால பிரச்னைகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நட்பு நாடுகளின் சவால்களை இந்த போர்க்கப்பல் சமாளிக்கும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து