முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்கக்கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : மாவட்ட நீதிமன்றங்கள் விசாரிக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், காலதாமதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது.

கீழமை நீதிமன்றங்களில் நடத்தப்படும் சிவில் வழக்குகளை விரைந்து முடிக்க அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ''கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட சிவில் வழக்குகள் குறித்து அந்தந்த மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில், விரைந்து விசாரிக்க உத்தரவிட முடியாது. மேலும் வழக்கு விசாரணையின்போது காலதமாதம் செய்வதற்காக தேவையில்லாமல் விசாரணையை தள்ளிவைக்ககூடாது.

வழக்கை காலதாமதம் செய்வதற்காக வழக்கை தள்ளிவைக்கக் கோரி மனுதாரரோ அல்லது எதிர் மனுதாரரோ நீதிமன்றத்தில் கூறினால் அதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற காலதாமதத்தால் பல வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் கூட நிலுவையில் இருந்து வருகின்றன. கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முழுமையாக நடைபெற்று முடிந்த பின்னரே வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும். 

அதில் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஒரு சில வழக்குகளை மட்டும் விரைந்து விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது. விரைந்து விசாரணையை முடிக்கும் சூழல் இருந்தும், காலதாமதம் செய்வது தெரியவந்தால் மட்டுமே உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியும்.'' என தெரிவித்தார். மேலும், இதையடுத்து கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுக்களை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து