முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஜனவரி 29-ல் தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      தமிழகம்
Stalin 2023 01-23

Source: provided

சென்னை : மத்திய அரசின் 2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்க, ஜனவரி 29-ம் தேதி திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29.01.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது, கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் 2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து பொருளில் விவாதிக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து