முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத், கோத்ரா கலவரத்தில் கைதான 22 பேரும் விடுதலை

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      இந்தியா
Gujarat 2023 01 25

கோத்ரா கலவரத்தின் போது, 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை செய்து குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்ட ஹலோல் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2002-ம் ஆண்டு கோத்ரா கலவரத்துக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் நடந்த வன்முறைவெறியாட்டத்தில் 17 பேரைக் கொலை செய்தக் குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி பயங்கர வன்முறை வெடித்து அதில் 17 பேர் கொலை செய்யப்பட்டு, சாட்சியங்களை மறைக்கும் வகையில் அவர்கள் அனைவரும் எரிக்கப்பட்டதாக வழக்கப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி ஹர்ஷ் திரிவேதி, 22 குற்றவாளிகளையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். விசாரணையின்போதே, இந்த 22 பேரில் எட்டு பேர் இறந்துவிட்டதாக வழக்குரைஞர் கோபால்சின்ஹ சோலங்கி தெரிவித்துள்ளார்.

2002-ஆம் ஆண்டு அயோத்தியிலிருந்து யாத்ரிகா்கள் மற்றும் கரசேவகா்களுடன் வந்த சபா்மதி எக்ஸ்பிரஸ், குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 29 ஆண்கள், 22 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 59 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்தது. அதில், 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனா்.

டேலோல் கிராமத்தில் நடந்த வன்முறையில் 17 பேர் கொல்லப்பட்டு உடல்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான், காவல்துறை ஆய்வாளர் புதிய வழக்குப் பதிவு செய்து, இதில் தொடர்புடைய 22 பேரை கைது செய்தார். ஆனால், இவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களைத் திரட்ட முடியாமல் போனது என்று வழக்குரைஞர் சோலங்கி தெரிவித்துள்ளார்.

அனைவரது உடல்களும் எரிக்கப்பட்டதால், உடல்களைக் கூட காவல்துறையினரால் கைப்பற்றமுடியாமல் போனதாகவும், நதிக்கரையோரம் இருந்த சில எலும்புகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் அதைக் கொண்டு யாரையும் அடையாளம் காண முடியாமல் போனதாக குற்றவாளிகளுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, குற்றவாளிகள் 22 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அதில் 8 பேர் விசாரணையின்போதே இறந்துவிட்டதாகவும் சோலங்கி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து