முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் பாதித்தோருக்கு உதவினால் 5 ஆயிரம் ரூபாய் பரிசு : புதுச்சேரி போக்குவரத்து துறை அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2023      இந்தியா
Pondy 2023 01 31

Source: provided

புதுச்சேரி : சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நல்லெண்ண தூதுவர்களுக்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் பரிசாக ரூ.5000 வழங்கி கவுரவிக்கப்படும் என்று புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள திட்டத்தின்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நல்லெண்ண தூதுவர்களுக்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் (Good Samaritan) பரிசாக ரூ.5000 (ரூபாய் ஐந்து ஆயிரம்) மற்றும் பாரட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது).

மேலும் ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் அவர்கள் புரிந்த சேவையை வைத்து தேசிய அளவில் சிறந்த 10 நல்லெண்ண தூதுவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ.1,00,000 (ரூபாய் ஒரு லட்சம் ) பரிசு வழங்கி கவுரவிக்கப்படும். மேலும் வழிகாட்டுதல் மற்றும் நிபந்தனைகளுக்கு புதுச்சேரி போக்குவரத்து துறையின் https://transport.py.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து