முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரன்சி நோட்டுகளில் சார்லஸின் உருவம் நீக்கம்: ஆஸ்திரேலிய அரசு முடிவு

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      உலகம்
Charles 20221 02 02

Source: provided

கான்பெர்ரா: ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இருந்து இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசின் உருவம் நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது. 

இங்கிலாந்து நாட்டின் காலனி நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா இருந்து வருகிறது. இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத் இருந்த வரை அவரது உருவப் படங்கள் பதித்த கரன்சி நோட்டுகள் ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருந்தன. அவர் மறைவுக்கு பின்னர், இங்கிலாந்து அரசராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றார். 

இதனை தொடர்ந்து, பழைய கரன்சி நோட்டுகளில் உள்ள ராணியின் உருவப் படத்திற்கு பதிலாக அரசர் சார்லசின் படங்களை இடம் பெற செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 

புதிய ஆஸ்திரேலிய டாலரானது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது. அதனால், கரன்சி நோட்டுகளில் இருந்து இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசின் உருவங்களை நீக்குவது என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அரசுடன் கலந்து ஆலோசித்து அதற்கான ஒப்புதல் அளித்த பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மத்திய வங்கி தெரிவித்து உள்ளது. எனினும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றஞ்சாட்டியுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து