எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கையில் எலும்புமுறிவு ஏற்பட்டபோதும் இடக்கையால் ஒருமுறை அல்ல, இருமுறை பேட்டிங் செய்து அனைவருடைய பாராட்டுகளையும் மீண்டும் பெற்றுள்ளார் விஹாரி. இந்தூரில் ஆந்திரா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. முதல் நாளன்று விஹாரி பேட்டிங் செய்தபோது அவேஷ் கானின் பவுன்சர் பந்தால் அவருடைய இடக்கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் 16 ரன்களில் இருந்தபோது காயம் காரணமாக ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. 2-வது நாளன்று அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இடக்கை பேட்டராக மாறியிருந்தார். இடக்கை மணிக்கட்டில் மேலும் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இப்படி விளையாடினார்.
முதல் இன்னிங்ஸில் 328/4 என்கிற நிலையில் இருந்த ஆந்திர அணி, 353/9 எனத் தடுமாறியபோது பேட்டிங் செய்ய களமிறங்கினார் விஹாரி. அணியின் நலனுக்காக வழக்கத்துக்கு மாறாக இடக்கையில் பேட்டிங் செய்தார். வழக்கமான வலக்கை பேட்டராக விளையாடினால் இடக்கை மணிக்கட்டில் மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் இடக்கை பேட்டராக விளையாட முடிவெடுத்தார். எனினும் மீண்டும் பேட்டிங் செய்தபோது வலக்கையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டிங் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். விஹாரின் இந்தச் செயலுக்குச் சமூகவலைத்தளங்களில் அதிக பாராட்டுகள் கிடைத்தன. பிரபல வீரர்களும் விஹாரியைப் பாராட்டினார்கள்.
________________
போலீஸ் ‘அவதார’ எடுத்த
டோனி போட்டோ வைரல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, போலீஸ் சீருடையில் மிடுக்கோடு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக வலம் வந்து கொண்டுள்ளது. அந்தப் படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ‘இவர்தான் அசல் சிங்கம்’, ‘இது சூப்பர் சிங்கம்’, ‘சூப்பர் போலீஸ்’ என்றெல்லாம் சொல்லி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.அது போல இந்த முறை டோனி, போலீஸ் வேடத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம்தான் இப்போது வைரலாகி உள்ளது. டோனி, இந்திய பிராந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ளார் டோனி. அதற்காக அவர் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் அவர் பயிற்சி எடுத்து வருகிறார் என அனைவரும் அறிவோம். ராஞ்சியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான டி20 போட்டியின் போது அவர் இந்திய வீரர்களை சந்தித்திருந்தார். போட்டியையும் நேரில் பார்த்து ரசித்திருந்தார்.
________________
மத்திய பட்ஜெட்டில் ரூ.3,397 கோடி
விளையாட்டு துறைக்கு ஒதுக்கீடு
ஆசிய விளையாட்டு போட்டி, பாரீஸ் ஒலிம்பிக் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,397.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.723.97 கோடி அதிகமாகும். 2022-23-ம் நிதியாண்டில் முதலில் அறிவிக்கப்பட்ட ரூ.3,062.60 கோடி நிதி பின்னர் ரூ.2,673.35 கோடியாக குறைக்கப்பட்டது. சீனாவில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசியத் திட்டமான ‘கேலோ இந்தியா’ இம்முறையும் மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டமாக தொடர்கிறது. இந்த திட்டத்திற்கு கடந்த நிதியாண்டில் ரூ. 606 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,045 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இது ரூ.439 கோடி அதிகமாகும். உலகளாவிய விளையாட்டு போட்டிகளான ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க சிறந்த வீரர்களை உருவாக்குவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
________________
எஸ்ஏ20 லீக் தொடரில்
பங்கேற்கிறார் பவுமா
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமாவுக்கு எஸ்ஏ20 லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற எஸ்ஏ20 ஏலத்தில் பவுமாவை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. தென்னாப்பிரிக்க வெள்ளைப் பந்து அணிகளின் கேப்டனாக இருந்தும் ஏலத்தில் யாரும் தன்னைச் சீந்தாததால் தன் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தற்போது, அவர் என்ன நினைத்தோரோ அது நடந்துள்ளது.
சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் ஒரு சதம் உள்பட 180 ரன்கள் எடுத்தார். 23 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடித்தார். ஸ்டிரைக் ரேட் - 114.64. ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, டாம் அபெலுக்குப் பதிலாக பவுமாவைத் தேர்வு செய்துள்ளது. ஜனவரி 10 அன்று தொடங்கிய எஸ்ஏ20 போட்டி, பிப்ரவரி 11 அன்று நிறைவுபெறுகிறது. 8 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்று 17 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் அணி.
________________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
11 Nov 2025சென்னை : திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை
-
தமிழகத்தில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட்
11 Nov 2025புது டெல்லி : தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதோடு, சிறப்பு தீவ
-
பீகார் மாநில சட்டசபை தேர்தல் முடிவு: கருத்துக்கணிப்பு விவரம் வெளியீடு
11 Nov 2025புதுடெல்லி : பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் அல்லது கூட்டணி யார்? என்ற கருத்துக்கணிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
-
டெஸ்ட் தொடர் எளிதாக இருக்காது: தென்னாப்பிரிக்க அணிக்கு சவுரவ் கங்குலி எச்சரிக்கை
11 Nov 2025மும்பை : இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கு
-
மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நமது கடமை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
11 Nov 2025சென்னை : மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய 80 ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய 80 ரோந்து வாகனங்களின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
டெஸ்ட் தொடர் குறித்து சிராஜ்
11 Nov 2025தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடர் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 10 நலிந்த கலைஞர்கள் உள்பட 525 கலைஞர்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
11 Nov 2025சென்னை : தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 525 கலைஞர்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
கொல்கத்தா அணியில் இருந்து வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட நான்கு வீரர்கள் விடுவிப்பு?
11 Nov 2025மும்பை : 19-வது ஐ.பி.எல்.
-
வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் உள்ளார்: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி காட்டம்
11 Nov 2025சென்னை : வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பா.ஜ.க. சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே எஸ்.ஐ.ஆர்.
-
திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Nov 2025சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
-
இடைத்தேர்தல் நடைபெற்ற நுவாபடா உள்ளிட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
11 Nov 2025ஐதராபாத் : 8 பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
-
தமிழ்நாட்டிற்கு மேகதாது அணையால் பாதிப்பில்லை : கர்நாடக முதல்வர் சித்தராமையா பேச்சு
11 Nov 2025பெங்களூரு : மேகதாது அணையால், தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று (நவ. 12) மாலை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பீகார் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுபான ஓட்டுப்பதிவு
11 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் நேற்று விறுவிறுபான ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு 60.40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறி
-
தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: ஸ்ரேயாஸ் விளையாடுவது சந்தேகம்: பி.சி.சி.ஐ தகவல்
11 Nov 2025சிட்னி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது சந்தேகம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பிலான சாலை மேம்பாலம் திறப்பு : தியாகி சங்கரலிங்கனார் என பெயர் சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
11 Nov 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 61 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சாலை மேம
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: இந்திய-தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிக்கு கூடுதல் பாதுகாப்பு
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிக்காக கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
டெல்லி குண்டுவெடிப்பு சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி : பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்
11 Nov 2025திம்பு (பூட்டான்) : டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-11-2025.
12 Nov 2025 -
தமிழகத்தின் செழுமையை உலகறிய செய்யும்: 'பொருநை அருங்காட்சியகம்' குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Nov 2025சென்னை : பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மை செழுமையை உலகறிய செய்யும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம்: தி.மு.க. அரசு மீது விஜய் மறைமுகமாக விமர்சனம்
12 Nov 2025சென்னை : சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
-
ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை-அபராதம்
12 Nov 2025சென்னை : சென்னை கவர்னர் மாளிகை முன் 2023-ம் ஆண்டில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதி
-
தமிழ்நாட்டில் இதுவரை 78 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : தேர்தல் ஆணையம் தகவல்
12 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்
12 Nov 2025புதுடெல்லி : இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழு தான் என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ள நிலையில், கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்தி


