முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவரனுக்கு ரூ. 640 குறைந்தது ஆபரண தங்கம் விலை

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      வர்த்தகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 640 குறைந்தது. 

மத்திய பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. 

ஒரு பவுன் தங்கம் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதாவது பவுன் ரூ.44 ஆயிரத்து 40-க்கும், ஒரு கிராம் ரூ.5,505-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.77.80 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ. 65 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,520 விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 குறைந்து ரூ.76.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்து 42,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 5335-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து