முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2025      உலகம்
Trump 2024-11-06

லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது மனைவியுடன் இங்கிலாந்து சென்றிருந்தார். கடந்த 3 தினங்களுக்கு முன்பு வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை சந்தித்து பேசினார். பின்னர் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்தார். முதலில் இருவரும் வர்த்தக தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றில் பங்கேற்றனர். இதில் இரு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

பின்னர் பக்கிங்காம்ஷையரில் உள்ள செக்கர்ஸ் இல்லத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். பேச்சுவார்த்தைக்குப்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஸ்டார்மரை கடுமையான பேச்சுவார்த்தையாளர் என பாரட்டிய ட்ரம்ப், இரு நாடுகளுக்கு இடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தையும் புகழ்ந்துரைத்தார். 

இந்த பேட்டியின்போது, இந்தியா மீது அதிக வரி விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது கூறியதாவது:- அது மிகவும் எளிமையானது. எண்ணெய் விலை குறைந்தால் புதின் பின்வாங்குவார். அவருக்கு வேறு வாய்ப்பு இருக்காது. அந்த போரை அவர் நிறுத்துவார். நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமானவன் என்பது உங்களுக்கு தெரியும். இந்திய பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் கூறினேன். 

நாங்கள் சிறந்த உறவை பேணி வருகிறோம். அவரும் ஒரு அழகான அறிக்கையை வெளியிட்டு இருந்தார். ஆனாலும் நான் அவர்களுக்கு வரி விதித்தேன். சீனாவும் அமெரிக்காவுக்கு அதிக வரி செலுத்துகிறது. அவர்கள் (இந்தியா, சீனா) ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காகவே நான் அவர்களை எதிர்க்கிறேன். வரி விதிக்கிறேன். உக்ரைன் போர் தொடர்பாக சில நல்ல செய்திகள் வரும் என நம்புகிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து