முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      உலகம்
Musharraf 2023 02 05

Source: provided

இஸ்லமபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் காலமானார். அவருக்கு வயது 79.

உடல் நலம் பாதிக்கப்பட்டு துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019-ம் ஆண்டு முதலே முஷாரப் துபாயில் வசித்து வருகிறார். 1999- ம் ஆண்டு ராணுவ தளபதியாக இருந்து ஆட்சியை பர்வேஷ் முஷாரப் பாகிஸ்தானில் கைப்பற்றியவர் ஆவார்.  

1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். தேச பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது. 1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார்.

நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து 1999-ல் அதிகாரத்தை கைப்பற்றினார் . ராணுவ ஆட்சியை பிரகடன் செய்த முஷாரப், பாகிஸ்தான் பாராளுமன்றதை கலைத்து அரசியல் சட்டத்தையும் முடக்கினார். 2001-ல் பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற முஷாரப், காஷ்மீர் பிரச்சனைக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து