முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க செல்லும் முன்பு முறையாக அறிவிப்பேன்: ஓபிஎஸ்.

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      தமிழகம்
OPS 2023 01 28

Source: provided

சென்னை : “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச் செல்வதற்கு முன்பு முறையாக அறிவிப்பேன்” என்று ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பசுமைவழிச் சாலை இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் விலகிய செந்தில்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மதுரை செல்வதற்காக விமான நிலையம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச் செல்வதற்கு முன்பு முறையாக அதுகுறித்து அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிப்.27-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (பிப்.7) நிறைவடைந்தது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்து, பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து