முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு

சனிக்கிழமை, 4 மார்ச் 2023      தமிழகம்
CM-3 2023 03 04

மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான்ஶ்ரீ மாரிமுத்து சென்னையில் நேரில் சந்தித்து மலேசியாவில் நடைபெற இருக்கும் 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு நம் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில்  நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23 வரை மலேசியாவில் நடைபெறும் என அண்மையில் புதிய அறிவிப்பு வெளியானது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து