முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே பாடலில் அமைச்சர் ஆகவில்லை உதயநிதி பேச்சு

திங்கட்கிழமை, 13 மார்ச் 2023      சினிமா
Udayanidhi 2023 03 12

Source: provided

மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் கண்ணை நம்பாதே. இந்த படம் இந்தவாரம் வெள்ளியன்று வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, மாரிமுத்து, செண்ட்ராயன், இசை அமைப்பாளர் சித்து குமார், வசுந்தரா, சுபிக்ஷா இயக்குனர் மு.மாறன், ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், எனக்கு இந்தப் படம் வெளியாகுமா என்ற அச்சம் இருந்தது. தற்போது ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. இப்படத்தில் நான் 5 கெட்டபில் வருகிறேன். கலகத் தலைவன், நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் படத்தின் கெட்டப்பில் எல்லாம் வருவேன். நான்கரை ஆண்டு உழைப்பின் பலனாக இந்தப்படம் உறுவாகி இருக்கிறது. அதே போல நானும் ஒரே பாடலில்  அமைச்சர் ஆகவில்லை. நான்கரை ஆண்டுகள் உழைத்துத்தான் இந்த பதவிக்கு வந்துள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து