முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து பெண்களுக்கும் ரூ. ஆயிரம் தருவதுதானே தி.மு.க.வின் வாக்குறுதி : உரிமைத் தொகை குறித்து இ.பி.எஸ். விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்து விட்டு இப்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு என்று கூறுவது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது தி.மு.க. அரசின் 2-வது முழுமையான பட்ஜெட்டாகும்.  இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, 

கல்வியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு குறித்து விவாதிக்க அனுமதி கோரினோம். அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் நாங்கள் வெளியேறினோம். 

நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை. இரண்டு ஆண்டுகளில் அதிகளவில் கடன் வாங்கியுள்ளனர். எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை நடக்கிறது. இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது.

தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி, பால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி., கலால் வரி, பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல் வரி வருவாய் உயர்ந்துள்ளது. 

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது உண்மையில் தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை பூஜ்யமாக இருந்திருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் வரி வருவாய் அதிகரித்தபோதும் வருவாய் பற்றாக்குறை வெறும் ரூ.30 ஆயிரம் கோடி மட்டுமே குறைந்துள்ளது. 

மேலும் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க எந்த திட்டமும் வகுக்கவில்லை. அதே போல் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் என்று சொல்லி விட்டு இப்போது தகுதியான குடும்ப தலைவிக்கு என்கிறார்கள். 

ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை. ரூ. 7000 கோடி ஒதுக்கி விட்டு ஒருகோடி பேருக்கு ரூ.1000 கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து