முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க, சீன செயலிகளை கட்டுப்படுத்த பிரான்ஸ் பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      உலகம்
France 2023 03 24

Source: provided

பாரீஸ் : அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் உள்ள பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலிக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்தன. அதன்படி பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டிக் டாக் செயலியை அரசின் மின்னணு சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இவை தனியுரிமையை மீறுவதாக குற்றச்சாட்டு இருந்தது. அது போல ரஷ்யாவில் டிக் டாக், ஸ்னப்-சாட், டெலிகிராம், வாட்ஸ் அப் போன்றவை பயங்கரவாத செயலிகளாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தனது நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா மற்றும் சீன நிறுவனத்தின் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து