முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை பேட்டி

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      தமிழகம்
Annamalai 2023-03-02

Source: provided

மதுரை : தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் எந்தவித குழப்பமில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவி வந்தன. அ.தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள அண்ணாமலை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று காலை மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நான் டெல்லி சென்று அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அமித்ஷாவுடனான எனது சந்திப்பு வழக்கமானதே.

இந்த சந்திப்பின்போது பா.ஜ.க.வின் வளர்ச்சி, கட்சிப் பணிகள் பற்றி பேசினேன். தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசினேன். தமிழகத்தில் பா.ஜ.க.வை வலிமையாக்குவது குறித்து பேசினேன். தமிழகத்தில் தி.முக. ஆட்சி அமைந்து 20 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஒரு இடைத்தேர்தல் நடந்துள்ளது. தமிழகத்தின் அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

இந்நிலையில் நான் தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி பற்றியே அமைச்சர் அமித்ஷாவிடம் பேசினேன். நாங்கள் தமிழகத்தில் வேகமாக வளர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளோம். பா.ஜ.க. மக்கள் செல்வாக்கைப் பெற விரும்புகிறது. ஆளுங்கட்சியாக வளர விரும்புகிறது. அது குறித்தே பேசினேன். மேலும் கூட்டணி விவகாரங்களில் பா.ஜ.க. மத்தியக் குழு தான் எந்த ஒரு முடிவும் எடுக்கும். ஆகையால் நான் கூட்டணி விவகாரங்கள் பற்றி ஏதும் பேசவில்லை.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல் எல்லாக் கட்சியினரும் அவர்கள் கட்சியே வளர வேண்டும் என்றே விருப்பம் இருக்கும். கூட்டணியில் இருந்தாலும் அவ்வாறே கட்சிகள் நினைக்கும், செயல்படும். மேலும், ஒரு கூட்டணியில் சிராய்ப்புகள், உரசல்கள் வருவது சகஜமே. மற்றபடி எங்கள் கூட்டணி ஆக்கபூர்வமான கூட்டணி. எனக்கோ, பா.ஜ.க.வுக்கோ எந்த ஒரு தனிப்பட்ட கட்சி, தலைவர் மீது கோபமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து