முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷ்யா : ஐரோப்பிய நாடுகள் கலக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      உலகம்
Russia 2023 03 26

Source: provided

மாஸ்கோ : ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. நேற்றுடன் போர் 396-வது நாளாக நீடித்து வருகிறது.  இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. 

இந்நிலையில், அண்டை மற்றும் ஐரோப்பிய நட்பு நாடான பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது. ரஷ்யா, உக்ரைன், போலாந்து, லிதுவேனியா, லடிவா ஆகிய நாடுகளை பெலாரஸ் எல்லையாக கொண்டுள்ளது. பெலாரசில் அணு ஆயுதத்தை நிறுவிய போதும் அதன் கட்டுப்பாடு அனைத்தும் ரஷ்யாவிடமே இருக்கும் என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது. அதே வேளை, 1991-ம் ஆண்டில் சோவியத் யூனியன் சரிவின்போது உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்திருந்தது. 

சோவியத் யூனியன் சரிவை தொடர்ந்து உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் தனிநாடுகளானதால் அங்கிருந்து 1996-ம் ஆண்டுக்குள் அனைத்து அணு ஆயுதத்தையும் ரஷ்யா திரும்பப் பெற்றுக் கொண்டது. தற்போது பல ஆண்டுகள் கழித்து வெறொரு நாட்டில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவும் நிகழ்வு உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெலாரஸில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவதால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து