முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா நிறுவனம்

வியாழக்கிழமை, 25 மே 2023      உலகம்
Mark-Zuckerberg-2023-5-26

கலிபோர்னியா, பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா 5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா பரவலுக்கு பிந்தைய கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக டுவிட்டர், மெட்டா, அமேசான் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. குறிப்பாக மெட்டா நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

இதனிடையே கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் அனைத்து உயர் அதிகாரிகளிடம் இரண்டாவது கட்டமாக பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் லிஸ்ட் தயாரிக்க கூறியிருந்தார். இந்த முறை சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. 

இந்த நிலையில், மெட்டா நிறுவனம் இறுதிக்கட்ட பணி நீக்க நடவடிக்கையாக 5,000 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியர்கள் லின்க்டுஇன் தளத்தில் பணி நீக்க நடவடிக்கை குறித்து பதிவிட்டு வருகின்றனர். சுமார் 5000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

இந்த முறை பணிநீக்க நடவடிக்கையில் விளம்பரங்கள் விற்பனை, மார்கடிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டணிகள் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து