முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதற்றம் தணிந்ததால் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      இந்தியா
manipur-2023-05-04

இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வன்முறை பாதிப்புக்குள்ளான வடகிழக்கு மாநிலத்தில் கலவரம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். 

மணிப்பூரில் கலவரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூர் உள்ளிட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2000 ஆயுதங்கள் போலீஸாரின் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சரின் எச்சரிக்கைக்குபிறகு, கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் 140 ஆயுதங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மணிப்பூரின் ஐந்து மாவட்டங்களில் பதற்றம் தணிந்ததையடுத்து அங்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து