முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடிய உக்ரைன் ராணுவ வீரர்கள்

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      உலகம்
Ukrainian-military 2023-06-

Source: provided

கீவ் : உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனதோடு, ஆஸ்கார் விருதையும் வென்றது. படம் வெளியான போதே இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர். போல ரீல்ஸ் நடனமாடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். 

இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே நாட்டு நாட்டு பாடல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வெளியே படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், போருக்கு மத்தியில் உக்ரைன் வீரர்களின் நடனத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 16 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 16 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து