முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல்: 2 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் செய்த செலவு 130 கோடி ரூபாய்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      இந்தியா
Congress 2023 03 25

Source: provided

புதுடெல்லி: குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.103 கோடியே 62 லட்சத்தை செலவு செய்துள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ரூ.27 கோடியே 2 லட்சத்தை செலவு செய்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. இமாசலபிரதேச மாநிலத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க.விடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி செலவு செய்த தொகை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தது.

அதன்படி, குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.103 கோடியே 62 லட்சத்தை செலவு செய்துள்ளது. அதே நேரத்தில் இமாசலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ரூ.27 கோடியே 2 லட்சத்தை செலவு செய்திருக்கிறது. ஆக, இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ரூ.130 கோடி செலவு செய்துள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ரூ.49 கோடியே 69 லட்சத்தை செலவு செய்ததாக கணக்கு காட்டி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து