முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லபுசேன் தூக்கத்தை கலைத்த முகமது சிராஜ்

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      விளையாட்டு
Mohammed-Siraj 2023 06 09

Source: provided

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்தியாலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில் வார்னர் ஆட்டமிழக்கும் முன் அடுத்து களமிறங்க இருந்த மார்னஸ் லபுசேன் ஓய்வறையில் அசந்து தூங்கும்  காட்சிகள் காட்டப்பட்டது. ஆனால் அவர் தூங்கி கொண்டிருக்கும் போதே சிராஜ் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார்.இதனால் இந்திய ரசிகர்களின் உற்சாகம் விண்ணை தொட்டது. ரசிகர்களின் கரகோஷத்தால் எழுந்த லபுஷேன், டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததை பார்த்து உடனடியாக பேட்டிங் செய்ய களமிறங்கினார். இதனால் லபுசேன் உடனடியாக விழித்துக்கொண்டு பேட்டிங் செய்ய களமிறங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

________________

ஷிகர் தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து மற்றும் அவர்களது குழந்தை தொடர்பாக இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சட்ட நடவடிக்கைகளைத் மேற்கொண்டு வருகின்றனர்.குழந்தை தற்போது ஆயிஷாவுடன் ஆஸ்திரேலியாவில் உள்ளது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குழந்தை மீது தாய்க்கு மட்டும் தனி உரிமை இல்லை என்றும் குடும்ப நிகழ்ச்சிக்கு ஒன்பது வயது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர ஆயிஷா முகர்ஜிக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஹரிஷ் குமார், குழந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர ஆட்சேபம் தெரிவித்ததற்காக ஆயிஷா முகர்ஜியை கண்டித்தார். ஆகஸ்ட் 2020 முதல் தவானின் குடும்பத்தினர் குழந்தையைப் பார்க்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குழந்தை தனது தாத்தா பாட்டியை சந்திக்க வேண்டும் என்ற தவானின் விருப்பம் நியாயமானது என்று நீதிபதி கூறினார்.

________________

கிரிக்கெட் தொடர்களை இலவசமாக பார்க்கலாம் 

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 48 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் ஆட்டங்கள் என மொத்தம் 51 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மேலும், 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரும் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெர்வித்ததால் ஆசிய கோப்பை தொடர் எங்கு நடைபெறும் என இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றை இந்தியாவில் உள்ள ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம் என ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கும் வசதியை அந்நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து