முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே நோக்கம்: கார்கே

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      இந்தியா
Malligarjuna 2023-07-27

Source: provided

ஐதராபாத் : 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே காங்கிரசின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். 

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.  கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது, 

2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதே காங்கிரசின் நோக்கமாக இருக்க வேண்டும். நாட்டில் மாற்று அரசை அமைக்க அயராது உழைக்க வேண்டும். புதிய பிரச்சினைகளை கொண்டு வந்து முக்கியமான அடிப்படை பிரச்சினைகளில் இருந்து மக்களை மோடி அரசு திசை திருப்புகிறது. 

 சமீபத்தில் மும்பையில் இண்டியா கூட்டணி கட்சி கூட்டம் நடந்த போது, மோடி அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழுவை அமைத்தது. அனைத்து மரபுகளுக்கும் முரணாக இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதி சேர்க்கப்பட்டுள்ளார். 

நமது தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைத்து விட்டு ஓய்வின்றி நாம் உழைக்க வேண்டும். மேலும், நமது தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு கட்சியின் வெற்றியை முன்னிலைப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த சர்வாதிகார அரசை துடைத்தெரிய நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து