முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் விவகராம்: மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      இந்தியா
MP 2023-09-19

Source: provided

புதுடெல்லி : தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மனு அளித்துள்ளனர். 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தங்களிடம் தண்ணீர் இல்லை என்று கூறி காவிரி நீரை தர மறுக்கிறது. இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்தனர். 

அதில், தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து