முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டுவிட்டர் பயனாளர்களிடமிருந்து மாதாந்திர கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் திட்டம்

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      உலகம்
Elon-Musk 2023-09-19

Source: provided

வாஷிங்டன் : எக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள டுவிட்டர் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களிடமிருந்தும் மாதாந்திர கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

டுவிட்டர் வலைத்தளத்தை தன் வசமாக்கியது முதல் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.  டுவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றியதுடன் ஊழியர்கள் குறைப்பு பணம் கொடுத்து பிரிமியம் அக்கௌன்ட் உள்ளிட்ட பல மாற்றங்களை செய்துள்ளார். 

இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எலன் மஸ்க் சந்தித்து உரையாடினார். இந்த உரையாடலில் செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ குறித்து விவாதிக்கப்பட்டது. 

அப்போது கருத்து சுதந்தரத்தை பாதுகாப்பதற்கும் வெறுப்பு பேச்சுக்கு எதிராக போராடுவதற்கும் இடையே டுவிட்டரின் சமநிலையை ஏற்படுத்துமாறு எலான் மஸ்க்கை நெதன்யாகு கேட்டுக்கொண்டார். இதற்கு போலி கணக்குகளின் நடமாட்டமே காரணம் என்ற எலான் மஸ்க் இதனை தடுக்க வரும் காலத்தில் எக்ஸ் தளத்தை முழுமையான கட்டண வலைத்தளமாக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். 

எக்ஸ் இணையதளத்திற்கு ஒரு கட்டண சுவரை அமைப்பதன் மூலம் தான் போலி கணக்குகளை முழுவதுமாக ஒழிக்க முடியும் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். தற்போது பிரிமியம் சேவைகளுக்கு மட்டுமே பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் விரைவில் 100 சதவீத கட்டண வலைத் தளமாக டுவிட்டரை மாற்ற எலான் மஸ்க்  திட்டமிட்டிருக்கிறார். எனினும் பயனாளர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் சந்தா செலுத்துவதால் கிடைக்கும் அம்சங்கள் என்பது குறித்த விவரங்களை பகிரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து