முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோர்ட் அவமதிப்பு வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வாரண்டு பிறப்பிப்பு : அக். 4-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேரடி உதவிப்பிரிவு அதிகாரிகளாக பணிபுரியும் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ஓய்வு பெற்ற அதிகாரியான ஸ்டீபன் ஜோசப் தேவதாஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, நேரடி உதவிப்பிரிவு அதிகாரிகளுக்கு அந்தந்த துறைகளில் கூடுதல் செயலாளர் வரை பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டிருந்தது. 

ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்தாததால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர், இந்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான ஸ்வர்ணா, மைதிலி கே.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட்டு உத்தரவுப்படி பதவி உயர்வு வழங்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,

இந்த வழக்கில் நேரில் ஆஜராகாத ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் செயல் இந்த ஐகோர்ட்டை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது. அதனால், அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்டு பிறப்பித்து உத்தரவிடுகிறோம். விசாரணையை வருகிற அக்டோபர் 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்' என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து