முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விடுமுறை: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்
kutralam

Source: provided

நெல்லை:தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது. குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. 

நேற்று முதல் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் காலையில் இருந்தே அருவிகளில் குடும்பத்துடன் வந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும், காயல்பட்டினத்திலும் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. 

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. எட்டயபுரத்தில் 1.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து