முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருத்து சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கிறார்: கனடா அதிபர் ட்ரூடோவுக்கு எலான் மஸ்க் கண்டனம்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      உலகம்
Trudeau-Elan-Musk 2023-10-0

Source: provided

வாஷிங்டன் : கருத்து சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கிறார் கனடா அதிபர் ட்ரூடோ என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

இணையதள ஸ்ட்ரீமிங் சட்டம்  எனும் புது சட்டத்தின் மூலம் 10 மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டும் இணையதள சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அரசாங்கத்திடம் பதிவு செய்து அரசு விதிக்கும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என கனடா அரசாங்கத்தின் வானொலி, தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அவ்வாறு பதிவு செய்ய நவம்பர் 28-ம் தேதி வரை காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளது. இந்த உத்தரவு, ஆடியோ, வீடியோ சேவைகளை வழங்கும் பல வலைதளங்கள் உட்பட சமூக வலைதளங்களுக்கும், இணையவழி சந்தாதாரர் தொலைக்காட்சி சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும். 

உலகத்திலேயே கனடா அரசாங்கம்தான் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பிற்போக்கு வழிமுறைகளை கையாண்டு வருகிறது என இது குறித்து கெல்ன் கிரீன்வால்ட் எனும் அமெரிக்க எழுத்தாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ட்ரூடோ கருத்து சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கிறார். வெட்கக்கேடு என குறிப்பிட்டு, கிரீன்வால்டின் கருத்தினை ஆமோதிக்கும் வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய நிறுவனரும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரான அமெரிக்கர் எலான் மஸ்க் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். கனடா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு உலகளவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து