முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் வகுப்பறை பெஞ்சில் தாளம் போட்டு அசத்திய மாணவர்கள் : வீடியோவை பகிர்ந்து பாராட்டிய அமைச்சர்

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      இந்தியா
School-students 2023-10-02

Source: provided

திருவனந்தபுரம் : பேனா, பென்சிலை பயன்படுத்தி வகுப்பறையில் உள்ள பெஞ்சில் தாளம் போட்டு அசத்திய மாணவர்களின் வீடியோ பகிர்ந்து கேரள கல்வித்துறை அமைச்சர் அந்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளி நாட்களில் மறக்க முடியாத மகிழ்வான நிகழ்வுகள் பல நடந்திருக்கும். வகுப்புகள் நடக்காத நேரத்தில் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பாட்டு படிப்பது, மேஜையில் கையால் மேளம் தட்டுவது, இப்படி பல நிகழ்வுகள்  நமது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். அவ்வாறு பள்ளி மாணவர்கள் பலர் இணைந்து, பள்ளி வகுப்பறையில் மேஜையில் பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி நிகழ்த்திய இசை முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்களே அந்த இசை முழக்கத்தை வகுப்பறையில் அரங்கேற்றி இருக்கின்றனர். அவர்கள் பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி மேஜையில் தட்டி இசையை ஏற்படுத்தியிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

பொதுவாக மாணவர்கள் பள்ளி வகுப்பறைகளில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது ஊக்குவிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்த மாணவர்களின் இந்த செயலுக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. அதிக அளவில் வரவேற்பே கிடைத்திருக்கிறது. 

காரணம் அவர்கள் வெளிப்படுத்திய இனிமையான இசை.பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி மேஜையில் தட்டி மாணவர்கள் நடத்திய அந்த இசை முழுக்கம், உண்மையான இசைக் கருவிகளை பயன்படுத்தி அடிப்பது போன்றே இனிமையாக ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. சமூக வலைதளங்களில் பரவிய அந்த வீடியோவை பலரும் பார்த்துள்ளனர்.

கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தனது முகநூல் பக்கத்தில் பள்ளி வகுப்பறையில் பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி இசை முழக்கத்தை வெளிப்படுத்திய கோழிக்கோடு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து