முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம்: தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023-ல் துப்பாக்கி சுடுதல் (ஆடவர் ட்ராப்) பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ரித்விராஜ் தொண்டைமானுக்கு என் பாராட்டுகள். 

மேலும் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றுமொரு திறமையாளரான ராம்குமார் ராமநாதனுக்கும் என் வாழ்த்துகள்.

ஸ்குவாஷ் விளையாட்டில் மகளிர் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ள நமது தமிழ்நாட்டு வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து