முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்பாக்கம் மருத்துவமனையில் போக்சோ கைதி தப்பியோட்டம்

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2023      தமிழகம்
Jail

Source: provided

சென்னை : கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய போக்சோ கைதி செந்தில்ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடந்த மே மாதம், டிராவல்ஸ் உரிமையாளர் செந்தில்ராஜா என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 130 நாட்களாக புழல் சிறையில் இருந்த செந்தில்ராஜாவை, டி.என்.ஏ. பரிசோதனைக்காக போலீசார் நேற்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து போக்சோ கைதி செந்தில்ராஜா தப்பியோடியுள்ளார். இதையடுத்து கீழ்பாக்கம் காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து செந்தில்ராஜாவை தேடினர். மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள மரங்கள் நிறைந்த பகுதி வழியாக அவர் தப்பிச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் செந்தில்ராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து