முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா சிறந்தவரின் கரங்களில் உள்ளது: பிரதமர் மோடிக்கு அமெரிக்கநடிகர் மைக்கேல் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      உலகம்
Modi-2023-11-28

பனாஜி, இந்தியா சிறந்தவரின் கரங்களில் உள்ளது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க நடிகர் மைக்கேல் டக்ளஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோவாவில் 54-வது சர்வதேச திரைப்பட திருவிழா நடந்து வருகிறது.  இதில், அமெரிக்க நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான மைக்கேல் டக்ளஸ் என்பவர் கலந்து கொண்டார். அவர் திரைப்பட திருவிழா மற்றும் பிரதமர் மோடியின் தலைமைத்துவ திறன்கள் ஆகியவற்றை பற்றி புகழ்ந்து பேசினார்.  அவர் கூறும் போது, 

இந்த திரைப்பட திருவிழாவில், 78 வெளிநாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு உள்ளன.  இதுவே, இந்த விழாவிற்கான தனித்தன்மையையும், அழகையும் காட்டுகிறது. இது, உலகம் முழுவதும் அறியப்படுகிற மற்றும் புகழப்படுகிற உங்களுடைய இந்திய திரைப்படங்களின் வலிமையை பிரதிபலிக்கிறது.  நீங்கள் சிறந்தவரின் கரங்களில் இருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் என கூறினார்.  

அவர் தொடர்ந்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குரின் முயற்சிகளுக்கும் தன்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட தயாரிப்புகள் மற்றும் அதற்கான நிதி செலவினம் ஆகியவற்றில் அதிகம் பணம் போடப்படுகிறது.  அதனால், இது ஒரு வெற்றிக்கான தருணம் ஆகவும் உள்ளது என்றும் அவர் கூறினார்.   இனம், மதம் மற்றும் பாலின வேற்றுமையின்றி மக்களை திரைப்படங்கள் ஒன்றிணைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து