முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை வரை ரோகித் சர்மா கேப்டனாக தொடர கங்குலி விருப்பம்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

மும்பை : குறைந்தது அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆஸி., வெற்றி...

உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்திய நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது இந்தியா. இந்திய அணி தோல்வியடைந்தபோதிலும், ரோகித் சர்மா தலைமையில் அணி தங்களது அபார திறனை வெளிப்படுத்தியதாக பலரும் பாராட்டி வருகின்றனர். உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் டி20 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ரோகித்திற்கு ஓய்வு...

இந்த டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறைந்தது அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

புத்துணர்ச்சியுடன்... 

இது தொடர்பாக அவர் பேசியதாவது., ரோகித் மற்றும் விராட் கோலிக்கு  இந்த ஓய்வு என்பது மிகவும் அவசியமானது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி  டி20 போட்டியில் புத்துணர்ச்சியுடன் களமிறங்க அவர்களுக்கு இந்த ஓய்வு உதவியாக இருக்கும். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தயாரான பிறகு, அவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட வேண்டும். ஏனெனில், அவர் உலகக் கோப்பையில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். 

அமெரிக்காவில்...

உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரோகித் மற்றும் விராட் இருவரும் இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்கள். குறைந்தது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை வரையிலாவது ரோகித் சர்மா இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார். ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா  மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து