முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.67 லட்சம் கோடி: கடந்த ஆண்டை விட 15 சதவீதம் உயர்வு

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      இந்தியா
GST 2023-03-01

புது டெல்லி, கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.67 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்து வருகிறது. 2017-18-ம் நிதியாண்டில் மாதம் ஒன்றிற்கு சராசரி வசூல் ரூ.ஒரு லட்சம் கோடிக்கு கீழ் இருந்து வந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்கு பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.67 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 

நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் ரூ.1.45 லட்சம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு மாதத்தில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு கூடுதலான ஜி.எஸ்.டி. வசூலை, தொடர்ந்து 9-வது மாதமாக ஈட்டி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1.72 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும். 2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து