முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயகாந்த் நலமுடன் உள்ளார் நடிகர் நாசர் பேட்டி

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      சினிமா      தமிழகம்
Vijayakanth 2023-07-28

சென்னை, விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்

80-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்தார். இதையடுத்து அவருக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூச்சு விடுவதற்கு விஜயகாந்த் சிரமப்பட்டு வருவதால் அவருக்கு மூக்கு வழியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் அதில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது. மேலும், விஜயகாந்துக்கு தொண்டையில் சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையி் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான நாசர் மற்றும் பெப்சி நிறுவனத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி இருவரும் நேற்று விஜயகாந்தை நேரில் சந்திக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தை  வெளியில் இருந்து பார்த்த இவர்கள், விஜயகாந்தின் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்துள்ளனர்.  அப்போது அவர்கள் விஜயகாந்த் கூடிய விரைவில் குணமடைவார் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த நாசர்,  விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் செய்தி மிகைப்படுத்தின செய்தி. நாங்கள் தலைமை மருத்துவரை பார்த்தோம். அவர் மிகவும் தெளிவாக விஜயகாந்த் வருவார் உங்களை பார்ப்பார்' என்று சொல்லி விட்டார். அதனால் தயவு செய்து மிகைப்படுத்தின செய்திகளை பரப்பாதீர்கள். இவ்வாறு நாசர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து