முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      இந்தியா
Student 2023-05-25

Source: provided

புதுவை : புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் நாளை பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிச. 4 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது புதுச்சேரி அரசு. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று புயலாக மாறும் என்றும் அது திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாயன்று காலை தெற்கு ஆந்திரம் - வடதமிழகத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, நாளை (4-ம் தேதி) புதுவைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னெச்சரிக்கையாக கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து