முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோதனையின்போது அத்துமீறல்: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது டி.ஜி.பி.யிடம் அமலாக்கத்துறை புகார்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
Shankar-Jiwal 2023 06 24

Source: provided

சென்னை : சோதனையின்போது அத்துமீறி நடந்து கொண்டதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீது டி.ஜி.பி.யிடம் அமலாக்கத்துறையினர் புகார் அளித்துள்ளனர்.  

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரெய்டு நடத்திய விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீது அமலாக்கத்துறை புகார் அளித்திருக்கிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில், மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். 

சுரேஷ் பாபு மீதான வழக்கு ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், இதே வழக்கை பிரதமர் அலுவலகம் மீண்டும் விசாரிக்க இருப்பதாகவும் கூறி இதிலிருந்து தப்பிக்க ரூ.2 கோடி வரை அங்கித் திவாரி லஞ்சம் கேட்டிருக்கிறார். 

இதனையடுத்து மருத்துவர் தமிழ்நாடு லஞ்ச ஒழப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், லஞ்சம் பெற்றதாக அங்கித் திவாரி கைது செய்யப்பட்டிருக்கிறார். 

அவரை திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. எனவே இது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள அங்கித் திவாரியின் அறையை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முயன்றனர். 

ஆனால் இதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த விவரங்களை காண்பித்து ரெய்டு நடத்தியே ஆக வேண்டும் என்று உறுதியாக கூறினர். இதனையடுத்து ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற ரெய்டில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதனையடுத்து அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வரலாற்றில் மத்திய விசாரணை அமைப்பின் அலுவலகத்தில் மாநில விசாரணை அமைப்பு ரெய்டு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது.  

இந்த நிலையில், சோதனையின்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதாக அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது. தமிழக டி.ஜி.பி.யிடம் மதுரை அமலாக்கத்துறை தரப்பில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.  அமலாக்கத்துறையின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் எடுத்து சென்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து